அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது! சுப்பர்மடம் கடற்றொழிலாளர்
சுப்பர்மடம் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள் அரசியல் தலையீடு காரணமாக தமது பகுதியில் ஏற்படுத்தப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வருத்தத்தினை தெரிவித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்துள்ளதாக சுப்பர்மடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வடமராட்சியிலுள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் பல சேர்ந்து மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாலை அவரது அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடர்பிலும், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும், தமது கோரிக்கைகளை எழுத்து மூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர்மடத்தில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் தொடர்பில் மன்னிப்புக்கோரியதாகவும் தனது முகநூலில் பதிவிட்டிருந்ததாகவும், அது உண்மைக்கு புறம்பானது என்றும் சுப்பர் மடம் மீனவர்கள் தெரிவித்துள்ளாளனர்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri