மட்டக்களப்பிற்கு பயணம் மேற்கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி (Photos)
மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பயணம் செய்து மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யு.எம்.இஸ்மையில் தலைமையில் நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கட்சியின் வளர்ச்சி தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்புதல்
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பாகவும், அதில் இருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் கட்சி தொடர்பாக பிரமுகர்களின் கேள்விகளுக்கு சுனில் ஹெந்துன்நெத்தி பதிலளித்துள்ளார்.
நெருக்கடியை வெல்வதற்காக துரித அணுகுமுறை
கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் நெருக்கடியை வெல்வதற்காக துரித அணுகுமுறை நூல் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதேச கல்வியலாளர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/f9d3fa20-67e6-46fa-954e-86e40e2e8efc/22-6301d2818fa24.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/30e6a6d8-0e07-4aac-bbb8-dd30936ea3ef/22-6301d281ba7b8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2a23a7fc-3ad9-4802-b5ff-fa66bf1c9161/22-6301d281e5f6a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e50bbca5-a301-4e24-8619-4c9c99ddc0ae/22-6301d2821d231.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/11b6c229-f9e6-41c3-94a9-63ab5ebc640c/22-6301d2824bb46.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)