செவனகல சீனி தொழிற்சாலையில் அரசுக்கெதிராக பாரிய சூழ்ச்சி!
செவனகல சீனி தொழிற்சாலையை கொண்டு அரசாங்கத்தை பெரும் பிரச்சினைக்குள்ளாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கரும்பு கொண்டு செல்வதற்கு இராணுவத்தை பயன்படுத்துதோடு பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையை ஈடுபத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சதித்திட்டங்களை முறியடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து சி.ஐ.டி ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செவனகல சூழ்ச்சி
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஓகஸ்ட் 16 முதல் 24 வரை பல சந்தர்ப்பங்களில் கரும்பு விவசாயிகளின் சாகுபடி பகுதிகளில் பல தீ விபத்துகள் ஏற்பட்டதன் மூலம் திடீரென புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
சில ஊடகங்கள் இவை தீ விபத்துகள் என்று செய்தி வெளியிடுகின்றன. கரும்பு சாகுபடி பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதில்லை. இவை தீ வைப்புக்கள் ஆகும். அதனால்தான் இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஆகஸ்ட் 16 முதல் 24 வரை 153 விவசாயிகளுக்குச் சொந்தமான 12,840 மெட்ரிக் டென் கரும்பு எரிந்துள்ளது. இந்த தீ விபத்துகள் மிகவும் திட்டமிட்ட முறையில் நடக்கின்றன. இதற்குக் காரணம், தீ வைத்த பிறகு, தொழிற்சாலை குறித்த கரும்புகளை வாங்க வேண்டும்.
கரும்புகளுக்கு தீ வைப்பு
எரிந்த கரும்பை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வதே வழமையாகும்.ஆனால் தொழிற்சாலையினால் தீ மூட்டப்பட்டால் அந்த கரும்பை வாங்கதற்காக, வெட்டுவது ஒரு செயற்பாடாகும்.
எரிந்த கரும்பை 72 மணி நேரத்திற்குள் அரைக்க எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், கரும்பில் உள்ள சர்க்கரை செறிவு சாத்தியமற்று போகும். சர்வதேச ரீதியிலும் இது நடைபெறுகிறது.
இந்தியாவும் பிரேசிலும் கூட கரும்பு வயல்களுக்கு தீ வைத்து, ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குள், தொழிற்சாலை,தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்கிறது. டிராக்டர் சங்கங்களின் வேலைநிறுத்தத்தை எதிர்க்கும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு.
நிர்ணயிக்கப்பட்ட செறிவுடன் கரும்பைப் பெற தொழிற்சாலைக்கு உரிமை உண்டு. எரிந்த கரும்பை சரியான நேரத்தில் பெறுவதற்கு யாராவது தடையாக இருக்கின்றனர். அரசாங்கத்தின் பணிகளை சீர்குலைக்க அவர்கள் பாடுபடுகிறார்கள்.
இது செவனகல பெல்வத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய செயல்முறை. இந்த அமைச்சகம் தோல்வியடைந்து விட்டது என்பதை உறுதிப்படுத்த செய்யப்பட்ட சதியாகும். இந்த சதியை தோற்கடிக்க நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



