காபன் சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடல்
காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
இலங்கை சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்த அமைச்சர், காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், சீனி உற்பத்தியின் தற்போதைய செயற்பாடுகள், சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் தேவைப்படும் விடயங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உற்பத்தித்திறன்
மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலும் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை, தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்தும் இதன்போது அவர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 8 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
