அநுரவை எப்படி அழைக்க வேண்டும்..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் ஹந்துனெத்தி
அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார்.
அத்துரலிய, திப்போட்டுவாவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது நல்ல இளைஞர்கள் குழுவால் ஆளப்படுகிறது என்பதை உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கின்றன.
என்ன பிரச்சினை?
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்; ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்.

ஆனால் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துள்ள போது, அவரை ஐயா என்று அழைப்பதிலும், ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை?
முன்பு போலல்லாமல், இலங்கையில் சில நல்லவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சில படித்தவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இலங்கையில் இப்போது ஒழுக்கம் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்