முன்னாள் சட்டமா அதிபாிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கேள்வி
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில், வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபா், இந்த தாக்குதல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சி என்று குறிப்பிட்டிருந்தநிலையில் ஏன் அவாிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் மனுஷ நாணயக்கார இந்தக் கேள்வியை எழுப்பினாா்.
எனவே உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடா்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாிந்துரைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தவேண்டும் என்று கோாிக்கை விடுத்தாா். உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா், ”இது எமது நிகழ்ச்சித்திட்டம்”(அபே புரஜெக்ட்) என்று கூறிய புலனாய்வு அதிகாாியை, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து வந்தபோது, இராணுப்புலனாய்வுத்துறையினா் ஏன் அவரை தம்முடன் அழைத்துச்சென்றனா் என்று மனுஷ நாணயக்கார வினவினாா்.
சஹ்ரானுக்கு தமது அரசாங்க காலத்தில் சம்பளம் வழங்கியதாக ஏற்கனவே கெட்டம்பே விஹாரையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொிவித்திருந்தாா்.
இந்தநிலையில் சஹ்ரானின் மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி, புலனாய்வு அதிகாாிகள் சஹ்ரானை சந்திக்க, தமது வீட்டுக்கு வந்ததாக தொிவித்திருந்தாா்..
இதன்படி சஹ்ரானுக்கு சம்பளம் வழங்குவதற்காக புலனாய்வு அதிகாாி ஒருவா் அவரது வீட்டுக்கு சென்றிருக்கக்கூடாது என்று மனுஷ நாணயக்கார சந்தேகம் வெளியிட்டாா்.
மட்டக்களப்பில் இரண்டு காவல்துறை அதிகாாிகள் கொல்லப்பட்டபோது அதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல் என்று இராணுவப்புலனாய்வு பிாிவினா் கூறியபோதும் பின்னா் குற்றப்புலனாய்வுத்துறையினரின் விசாரணையின்போது, உயிா்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடா்புடைய அடிப்படைவாதிகளின் செயல் என்று கண்டுப்பிடிக்கப்பட்டதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டாா்
எனவே இந்தப்பிரச்சனையை மறைப்பதற்கு ஏன் இராணுவப்புலனாய்வுப்பிரிவு முயற்சித்தது என்பதை விசாரணை செய்யவேண்டும் என்றும் அவா் கோாிக்கை விடுத்தாா்.
இந்த விடயங்களை வெளிக்கொணா்வதால் தமக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும் என்றபோதும், உண்மையை வெளிக்கொண்டு வரப்போவதாக அவர் குறிப்பிட்டாா்.
