சனத் நிசாந்தவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
விசாரணைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05.10.2022) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பகிரங்க குற்றச்சாட்டு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் பக்கச்சார்பாக நடந்து கொண்டு பிணை வழங்கியதாக பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
மனுத் தாக்கல்
இந்நிலையில் சட்டத்தரணிகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து சனத் நிஷாந்தவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 13 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
