தேசபந்துவை தொடர்ந்து டிரான்..! சிஐடியில் இருந்து பறந்த அழைப்பு
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸூக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை நாளையதினம்(31) குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டிரானிடம் வாக்குமூலம்
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான தகவல்களை முன்னாள் அமைச்சர் அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.