தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் TID விசாரணைக்கு அழைப்பு
தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாலசுந்தரம் கேதீஸ்வரன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 23ஆம் திகதி 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டி
யாழிலுள்ள அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராகவும், தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவராகவும் இருந்து வருகின்ற கேதீஸ்வரன் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அழைப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri