வரலாறு காணாத கோடை வெயில்: ஸ்பெயினில் மே மாதத்தில் மட்டும் 101 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெயில் நிலவி வரும் சூழலில், ஸ்பெயினில் கடந்த மே மாதத்தில் மட்டும் வெயிலின் தாக்கம் காரணமாக 101 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் தினசரி இறப்பு கண்காணிப்பு அமைப்பான 'மோமோ' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2015ஆம் ஆண்டு இந்த புள்ளிவிவரக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, மே மாதத்தில் பதிவான மிக அதிகப்படியான வெப்ப மரணங்கள் இதுவே ஆகும்.
[ZCTSUJN
வெப்ப மரணங்கள்
இந்த இறப்பு எண்ணிக்கையானது கடந்த பத்தாண்டுகளின் மே மாத சராசரி இறப்பை விட 3.6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வட அரைக்கோளத்தில் அதிகாரப்பூர்வ கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே, இந்த தீவிர வெப்ப அலை மக்களின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயினில் கடுமையான வெப்பம் காரணமாக 27,564 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் 2022-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 4,789 பேரும், அதற்கு அடுத்தபடியாக 2025-ஆம் ஆண்டில் 3,832 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக, மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வெப்பநிலையின் எல்லையைத் தாண்டி, ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இறப்புக்கான அபாய விகிதம் 9.1% முதல் 10.7% வரை உயர்வதாக மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan