இரண்டு வருடங்களுக்கு தேர்தலை பிற்போட நடவடிக்கை: சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசியலைமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போட எண்ணினால் அது பாரிய மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) கூறியதற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஏற்கனவே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதனை உடனடியாக நடத்துவதற்கான சட்டமூலங்களை இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றேன்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவதாக இருந்தால் நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக குழிதோண்டி புதைக்கப்பட்டதாகவே கருத வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |