தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திய சுமந்திரன் (Video)

Jaffna Parliament of Sri Lanka M A Sumanthiran President of Sri lanka
By Kajinthan Oct 25, 2022 10:44 AM GMT
Report

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலைத்திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும்.

அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார்.


2016ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது.

அந்த வழிகாட்டல் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாசவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திய சுமந்திரன் (Video) | Sumanthiran Statement About Ranil

2016ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது.

அதனடிப்படையில் தொடர்ந்து முன் சொல்ல ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம்.

ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என ஜனாதிபதி அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி பல ஆலோசகர்களின் கருத்தை கேட்டு இறுதியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டதுடன், தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திய சுமந்திரன் (Video) | Sumanthiran Statement About Ranil

யாழில் நேற்றைய தினம் (25.10.2022) இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் சிறுவர்கள் தற்பொழுது மந்தபோசாக்கான நிலையில் காணப்படுகின்றனர். நாட்டில் போசாக்கு தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அவ்வாறு எதுவுமில்லை என்று பொய் சொல்கின்றார்கள்.

போஷாக்கு தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் பட்டகொட என்கின்ற ஒருவர் உணவு பாதுகாப்பிற்காக ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சொல்லுகின்றார் நாட்டில் உணவு பற்றாக்குறை மற்றும் சிறுவர்களுக்கு போசாக்கு குறை என எதுவும் இல்லை என்று.

நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தெரியும் நாட்டில் எவ்வாறு பஞ்சம் பட்டினி ஏற்பட்டுள்ளது என்று. ஆனால் உணவு பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் அவ்வாறான பஞ்சம் பட்டினி எதுவும் இல்லை என்று கூறுகின்றார் என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலதிக தகவல் - தீபன், ராகேஷ்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US