செம்மணிப் புதைகுழி தொடர்பில் சுமந்திரன் வலியுறுத்தும் விடயம்
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போல் செம்மணி மனிதப் புதைகுழியையும் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.
உண்மை கண்டறியப்பட வேண்டுமானால் இந்த மனிதப் புதைகுழிகளைச் சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும்.
அதனால் தான் ‘அணையா விளக்கு’ போராட்டம் அறிவிக்கப்படவுடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந் தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள்.
வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் 'அணையா விளக்கு' போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை.
மனிதப் புதைகுழிகள் அகழாய்வு
செம்மணி மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும்.
விஞ்ஞான பூர்வமாக இது அணுகப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளைச் சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றோம்.
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போல் செம்மணி மனிதப் புதைகுழியையும் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
