செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை உறுதி : பிமல் தெரிவிப்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதிமன்றச் செயன்முறை
அவர் மேலும் தெரிவிக்கையில், மனித எலும்புக்கூடுகளைக் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஆய்வுகூடம் ஒன்றை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை எவ்வளவு ஆழமானது என்பதை நாம் அறிவோம்.
ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதியை நீதிமன்றச் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வழங்குவோம்.
அரசு என்ற ரீதியில் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு மில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri