சிறீதரன் - சிறிநேசனுக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரனிற்கு காத்திருந்த ஏமாற்றம்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அதிருப்தி அடைந்துள்ளதாக கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்த தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் மக்கள் மத்தியில் பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று விட கூடாது என்னும் வகையில் சுமந்திரன் செயற்பட்டார்.
இது தொடர்பில் முன்னதாக சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தர்ப்பம் ஒன்றிலும் சிறீதரனுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சுமந்திரனின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக சிறீதரன் வெற்றி பெற்றுள்ளமை சுமந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும், சிறீதரன் - சிறிநேசன் இருவரும் வெற்றி பெற்று விடுவார்கள் என நன்கு தெரிந்ததாலேயே சுமந்திரன் அவர்களுக்கு எதிராக செயற்பட்டதாகவும் அவ்வெற்றி சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும் எனவும் கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |