சுமந்திரனால் வர்த்தக சங்கத்திற்குள் வெடித்தது சண்டை..!
சுமந்திரனின் கடையடைப்பு அறிவிப்பு தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குழப்பமானது ஊடகங்கள் முன்னிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
சுமந்திரனை பின்கதவால் கூட்டிவந்தவர்
கடையடைப்பு நிலவரம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வர்த்தக சங்கத்தின் போசகரும், ரெலோ கட்சியின் முக்கியஸ்தருமான செ.மயூரன் அவ்விடத்தில் வருகை தந்து கருத்துக் கூறிய போது தலைவருக்கும் போசகருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்க தலைவர், போசகர் தேர்தலில் படு தோல்வி அடைந்தவர். அவர் தற்போது கூறுவது எந்த நியாயமும் இல்லை.
சுமந்திரனை பின்கதவால் வர்த்தக சங்கத்திற்கு கூட்டி வந்தது இவர் தான். அது தான் உண்மை.
எமது வர்த்தக சங்க போசகர் என்ற மனநிலையில் இருந்து பேச சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
ஊடக அறிக்கை விடுமாறு
இதன்போது கருத்து தெரிவித்த போசகர் செ.மயூரன், நாங்கள் கடையடைப்புக்கு அறிக்கை விட்டுள்ளோம். சுமந்திரனை நான் தான் வர்த்தக சஙகத்திற்கு கூட்டி வந்தேன்.

ஊடக அறிக்கை விடுமாறு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. ஒரு கட்சியின் பின்னனியில் இயங்குபவரே தலைவர்.
தன்னிசையாக தீர்மானம் எடுக்க முடியாது. இது வர்த்தக சங்கம் என்பது நகரத்திற்குள் உள்ள ஒரு சங்கமே தவிர வவுனியாவுக்கானது அல்ல.
நெடுங்கேணி, செட்டிகுளம், பூந்தோட்டம், நெளுக்குளம் என வர்த்தக சங்கங்கள் இருக்கும் போது இது வவுனியா வர்த்தக சங்கம் என எப்படி பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri