சுமந்திரனின் முடிவு பிழை: ரஜனி பகிரங்க குற்றச்சாட்டு
செயலாளர் பதவியை சுமந்திரன் கேட்டது பிழை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயப்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது “இரு அணிகளாக பயணிப்பது அழகல்ல. ஒன்றாக பயணிப்பதற்கான முயற்சியின் ஆரம்பமாக தனக்கு செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என சுமந்திரன் கோரியது தொடர்பில் உங்கள் பதில் என்ன” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி யாழ்ப்பாணத்திற்கு சென்றால் செயலாளர் பதவி கிழக்கிற்கு வர வேண்டும் என்பது மரபு.
இந்த நிலையில் சுமந்திரன் செயலாளர் பதவியை கேட்டது பிழை. அதில் மாற்று கருத்து இல்லை.
காரணம் என்னவென்றால் அவர் ஒரு தலைவர் வேட்பாளராக இருந்து மட்டக்களப்பில் வைத்து தலைவர் பதவி யாழ்ப்பாணத்திற்கு கிடைத்தால் செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஊடங்களில் அந்த விடயம் செய்தியாக வந்திருந்ததை நானும் பார்த்திருந்தேன். அவ்வாறான உறுதியை வழங்கி விட்டு தற்போது செயலாளர் பதவிக்கு போட்டிக்காக வருவதை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
