யாழின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் முன் பெண்ணின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் மகள்
வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் தவறான முடிவெடுத்த பெண் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(17.04.2023) அவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததுடன், அவருக்கு 10 வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்றிரவு (16.04.2023) பதிவாகியுள்ளது.
குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சட்டரீதியான நடவடிக்கை
இந்நிலையில் அந்த பெண் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வலி வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்கான காரணம்
இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை வலி வடக்கு முன்னாள் தவிசாளரின் மனைவி நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் முன்னாள் தவிசாளர் சுகிர்தனை வாக்குமூலம் பெறுவதற்காகவும் அவருடைய பாதுகாப்பு கருதியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு-கிழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டின் முன்னாள் ஒரு பெண் இவ்வாறு தவறான முடிவெடுத்தது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக தகவல்-தீபன்,கஜிந்தன்
You may like this video

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
