இனப்படுகொலைக்கு ஜேவிபியும் பங்காளிகளே! பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்துக்கு சுகாஸ் கண்டனம்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis Ministry of Defense Sri Lanka Current Political Scenario
By Kajinthan Sep 14, 2025 09:16 AM GMT
Report

இலங்கையில் எந்த விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி அமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இதுவரை எதையும் சாதிக்காத அநுர அரசாங்கம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

இதுவரை எதையும் சாதிக்காத அநுர அரசாங்கம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

போர் குற்றங்கள்

அதற்கு பதிலளிக்கும் போதே சுகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,''இலங்கையில் இடம்பெற்றது போர் குற்றங்கள் மாத்திரமல்ல, அதையும் தாண்டிய இனப்படுகொலை.

இனப்படுகொலைக்கு ஜேவிபியும் பங்காளிகளே! பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்துக்கு சுகாஸ் கண்டனம் | Sukash Condemns Deputy Defense Minister Comments

சிங்களப் பேரினவாத அரசானது, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழினத்தை திட்டமிட்ட வகையில் அழித்துக் கொண்டு வருகின்றது. அதனைத்தான் நாங்கள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை எனக் கூறுகின்றோம்.

பிரதி அமைச்சர் உண்மையை அறியாதவராக கதைக்கவில்லை. நடந்தது என்ன என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நடந்த இனப்படுகொலையினுடைய பங்காளிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மாத்திரம் கிடையாது.

பிரதி அமைச்சர் சார்ந்த ஜனதா விமுக்தி பெரமுனவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்துக்கும் மாறி மாறி முண்டு கொடுத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.

யுத்த காலம்

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த பொழுதும் அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதும் அவர்களுடைய ஆட்சியை பலப்படுத்துவதற்கான ஆதரவை ஜேவிபி வழங்கி இருந்தது.

இனப்படுகொலைக்கு ஜேவிபியும் பங்காளிகளே! பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்துக்கு சுகாஸ் கண்டனம் | Sukash Condemns Deputy Defense Minister Comments

இவர்களும் ஆட்சியாளர்களுடைய பங்காளிகளாக இருந்து இனப்படுகொலைக்காக பங்காற்றியவர்கள் தான். இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு ஜேவிபிக்கும் இருக்கிறது.

ஆகவே பிரதி அமைச்சருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்றது போர் குற்றத்தையும் தாண்டிய இனப்படுகொலை. இதற்கு முற்றுமுழுதான சர்வதேச விசாரணை தான் தீர்வாக அமைய முடியும்.''என கூறியுள்ளார்.

மகிந்தவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

மகிந்தவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

மகிந்த ராஜபக்சவிற்காக தம்பதியினர் செய்த செயல்! பலரையும் அதிர வைத்த பாசம்

மகிந்த ராஜபக்சவிற்காக தம்பதியினர் செய்த செயல்! பலரையும் அதிர வைத்த பாசம்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US