அவதூறு மற்றும் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் முன்னிலையாகாத விந்தன்
சுரேன் குருசுவாமி, தேர்தல் காலத்தில் தன்னை அவதூறுபடுத்தும் விதமாக செயல்பட்ட விந்தன் கனகரத்தின் மீது தொடரப்பட்ட அவதூறு மற்றும் நட்ட ஈட்டு வழக்கு இன்று (24) யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், குறித்த வழக்கிற்கு பிரதிவாதியான விந்தன் கனகரட்ணம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கிய சுரேன் குரு சுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் வடக்க மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஊடக சந்திப்பை நடாத்தி இருந்தார்.
வழக்கு தாக்கல்
இந்நிலையில் தன்னை தேர்தல் காலத்தில் வேண்டுமென்று அவதூறு பரப்பியதாக வேட்பாளரான சுரேன் குருசாமி, “வேண்டுமென்றே அவதூறு பரப்பியமைக்காகவும் மற்றும் நட்ட ஈடு கோரியும்” யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கானது இன்றையதினம் திங்கட்கிழமை அழைக்கப்பட்டபோது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சமூகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனுதாரரான சுரேன் குரு சுவாமி, ஊடக சந்திப்பில் என்னை பற்றி பொய் குற்றச்சாட்டுகளை விந்தன் கனகரட்ணம் முன்வைத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் எந்த சட்ட நடவடிக்கையும் தான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்ட விந்தன் நீதிமன்றத்திற்கு ஏன் சமூகமளிக்காது விட்டார் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |