நைஜீரியாவில் குழந்தையை சுமந்தபடி தற்கொலை குண்டுத்தாக்குதல்
நைஜீரியா நாட்டில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில், 19 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த போர்னோ மாகாணத்தில் முதலில், திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது.

இதனை தொடர்ந்து, குவோஜா நகரில் உள்ள பொது வைத்தியசாலையில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது.
போராளி குழுவினரின் தாக்குதல்
இதன்பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது. போகோ ஹரம் என்ற போராளி குழுவினர் பத்து ஆண்டுகளாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை.

இதேபோன்று, திருமண நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் 3-வது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
குழந்தையை முதுகில் சுமந்தபடி வந்த பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam