மின் கட்டணத்தை மேலும் குறைக்க பரிந்துரை
பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு, மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.
மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொண்டு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்மின்சாரத்தின் பங்களிப்பு
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மின் உற்பத்தியில் நீர் மின்சாரத்தின் பங்களிப்பு அதிகரித்ததே வாரியத்தின் நிதிச் செயல்பாடு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6000 கோடி ரூபா எனவும், 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31ஆம் திகதி வரை 8200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
