கோட்டாவின் சகாவிற்கு நடு வீதியில் நேர்ந்த கதி!
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை (28) பெலவத்தை, அக்குரேகொடாவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளரின் இல்லத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு அருகே குறித்த குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து அங்கிருந்தவர்களால் முட்டை மற்றும் சாண வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...