திருகோணமலை கொழும்பு புகையிரத சேவை நேர மாற்றத்தால் அவதியுறும் பயணிகள்
இதுவரை காலமும் திருகோணமலையிலிருந்து இரவு 7.00மணிக்கு புறப்பட்ட. இரவு தபால் புகையிரதம் வெள்ளிக்கிழமை 07.03.2025 முதல் மாலை 6.30 மணிக்கு திருகோணமலை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த புதிய நேரமாற்றம் காரணமாக பயணிகள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பல பயணிகளுக்கு இந்த புதிய நேர மாற்றம் தெரிந்திருக்கவில்லை.
குறிப்பாக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் மாலை 6.30 மணிக்கு பின்னரே புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஒரு சில நிமிடங்கள் மட்டும்
நிலைமையை உணர்ந்த புகையிரத நிலைய அதிபரினால் ஒரு சில நிமிடங்கள் மட்டும் புகையிரதத்தை தாமதிக்க வைக்க முடிந்துள்ளது.
அவசரமாக ஓடிவந்த பயணிகள் ஓடும் புகையிரதத்தில் பாய்ந்து ஏறியதையும் முடியாதவர்கள் பயணத்தை கைவிட்டு திரும்பியதையும் காண முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |