சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி ஏற்ற வேண்டாம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை மிகவும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் சுகாதர நடைமுறைகளை பேணாதவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சடத்தின் மூலம் தனிமைப்படுத்துமாறு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் குழு என்ற ரீதியில் முன்னெடுக்கும் கோவிட் சுகாதார பாதுகாப்பு நடவைக்கைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கைது செய்வதற்கான முழு அதிகாரம் பொலிஸிற்கு இருக்கின்றது.
அனாலும் பொலிஸாரான உங்களையும் பாதுகாத்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது, அவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம். சுகாதர சட்டத்தை மதிப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அது பொலிஸாரின் கடமை.
அதே போன்று சுகாதார சட்டத்தை உதாசீனம் செய்பவர்களை கைது செய்ய முடியும்.
அவ்வாறு கைது செய்தவர்களை அவர்கள் செய்த தவறு எது என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri