கனடாவில் இளம் தாயொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!
கனடாவில் இளம் தாயொருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வழக்கில் குற்றவாளியாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரித்தானியரொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வழக்கில் சில திருப்பங்கள் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இளம் தாயார் மற்றும் 22 மாத குழந்தை ஆகியோர் திடீரென மாயமாகியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரித்தானியாவினை சேர்ந்த 36 வயதான Robert Leeming என்பவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமக்கு தொடர்பில்லை என குற்றவாளி தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்து வந்த நிலையில்,தற்போது தமது காதலியை வாக்குவாதத்தின் போது சுத்தியலால் தாக்கி, பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தமையை ஒப்புக்கொண்டுள்ளதுடன்,குழந்தைக்கு என்ன ஆனது என்பது தமக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.
இதற்கமைய,கல்கரியில் இருந்து 70 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இருந்து தாயார் மற்றும் குழந்தை ஆகியோரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam