சசிக்கலாவிற்கு திடீரென மூச்சுத் திணறல்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சசிக்கலாவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிக்கலாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட மூச்சுத்திணறலை அடுத்து பெங்களூருவில் உள்ள பவுரிங் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும், இன்றிரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிக்கலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 27ம் திகதி அவருக்கான தண்டனை நிறைவுபெறுகிறது.
எதிர்வரும் 27ம் திகதி சசிக்கலா விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையிலேயே, அவர் திடீரென சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



