அரசு ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்! அடுத்த வாரம் முதல் நடைமுறை
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பான விசேட வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் பெரும் கூடுதல் செலவு ஏற்படுவதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் உதவி மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும் என இதற்கு முன்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தினங்களில் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இதற்கு முன்னர் அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
