புதுக்குடியிருப்பில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை - 11 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Food Crisis Nothern Province Office of Public Health
By Shan Apr 25, 2026 07:48 AM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது,  சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று(24.04.2026) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

குற்றச்சாட்டுக்கள்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், உணவகங்கள், வெதுப்பகங்கள், குளிர்பானக் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், மருத்துவச் சான்றிதழ் இன்றி பணியாற்றல், தனிப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த தவறுதல், கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி விற்பனை நிலையம் நடத்தல், சுவர் மற்றும் தரையை அசுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டன.

புதுக்குடியிருப்பில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை - 11 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Sudden Inspection Carried Health Officer Puthukudi

இதனையடுத்து, வள்ளிபுரம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஸ்ரன் ஜோய், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரால் நேற்று(24.04.2026) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அபராதம் விதிப்பு

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்து மொத்தமாக 235,000 ரூபா அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலையம் மற்றும் இரண்டு குளிர்பானக் கடைகள் என மொத்தம் 3 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

GalleryGalleryGalleryGallery 

குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறை - தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறை - தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

ஈரான் போர் விவகாரம் : கசிந்தது இரகசிய மின்னஞ்சல்

ஈரான் போர் விவகாரம் : கசிந்தது இரகசிய மின்னஞ்சல்

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US