இலங்கையின் தலைநகரில் திடீரென அதிகரித்த பாதுகாப்பு: பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் பொலிஸார் இன்று விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
காலி முகத்திடலில் விசேட இடத்தில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,