இந்தியாவை பதற வைத்த மற்றுமொரு தொடருந்து விபத்து! அலறியடித்து ஓடிய பயணிகள்
சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு தொடருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடருந்து மும்யை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சென்னை பேசின் பிரிட்ஜ் தொடருந்து நிலையம் அருகே லோக்மான்ய திலக் விரைவு தொடருந்து சென்று கொண்டு இருந்த போது தொடருந்து என்ஜின் பின்பக்கத்தில் இருந்து திடீரென தீ பிடித்துள்ளது.
இதன் பின்னர் தொடருந்து நிறுத்தப்பட்டதுடன், அதிகமான புகை வெளியேறுவதை கண்ட பயணிகளும் உடனடியாக தொடருந்தை விட்டு வேகமாக வெளியேறியுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம்
Fire broke out suddenly in coach of a moving Chennai-Mumbai LTT express near Basin Bridge station, Chennai around 6:50pm today.
— NK (@nirmal_indian) June 22, 2023
Passengers were seen jumping & running for their lives!#LokmanyaTilakExpress #Chennai #train #firepic.twitter.com/ck6x1ymKX5
இதையடுத்து சிறிது நேரத்திலேயே தீ தொடருந்து என்ஜின் முழுவதும் பரவியுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
உயர் மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தொடருந்து என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து, லோக்மான்ய திலக் விரைவு தொடருந்து புதிய என்ஜின் மாற்றப்பட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |