ஓய்வு எடுத்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்
பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் அதிகாரி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த அதிகாரி நேற்று இரவு கடமையின் பின்னர் மேசையில் தலை வைத்து உறங்கி ஓய்வு வெடுத்துள்ளார். எனினும் மேசை மீது தலை வைத்து உறங்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பென்தோட்டை உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய சுனில் வசந்த டி சில்வா என்ற 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.
உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.