வவுனியா விடுதியில் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த நபர் திடீரென உயிரிழப்பு
வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு - தெஹிவளையை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்கள் வவுனியா முதலாம் குறுக்கு தெருவிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் தெஹிவளையிலிருந்து வருகை தந்து தங்கியிருந்தவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து விடுதிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார்.
எனினும் நேற்று இரவு திடீரென மயக்கமுற்று தெஹிவளையை சேர்ந்த நபர் கீழே விழுந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் 1990 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் சுகயீனமுற்ற நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட முன்னரே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தெஹிவளையை சேர்ந்த ஜெகநாதன் உதயராஜ் (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
