தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1764 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வார இறுதியில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1876.87 டொலர்களாக பதிவாகியிருந்தது.
எனினும், உலகளாவிய ரீதியில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.