சூடான் விமான நிலையத்தில் தீப்பற்றி எரியும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளதுடன், 1800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும், அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு
அந்த வகையில், சூடானின் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தில் உக்ரைன் விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் செயற்கைக்கோள் படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதுடன் அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.