சூடானில் போர் நிறுத்தத்தையும் மீறி கடும் தாக்குதல்! பாதுகாப்பு இன்றி தத்தளிக்கும் மக்கள்
சூடான் நாட்டில் போர் நிறுத்தத்தையும் மீறி கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் இராணுவத்திற்கும், துணை இராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருவதுடன், தாக்குதல்கள் நடத்தப்படும் இடங்களில் இருந்து அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்தநிலையில், அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இன்று மாலை 6 மணி அது நடைமுறையில் இருந்தது.
பாதுகாப்பு இல்லை
எனினும், போர் நிறுத்தத்தை மீறி உம்துர்மன் பகுதியில் துணை இராணுவப்படை கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பெருமளவான இந்தியர்கள் வசிப்பதாக கூறப்படுகின்றது.
தாக்குதல் நடத்தப்பட்ட உம்துர்மன் பகுதியில் போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று அந்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.