தரமற்ற நிலக்கரி இறக்குமதி மோசடி - அரசாங்கத்துக்கு 37 மில்லியன் டொலர் இழப்பு
அண்மைக்காலமாக மின் உற்பத்திக்காக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட மோசடிச் சம்பவத்தின் காரணமாக அரசாங்கத்துக்கு 37 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திக்காக அண்மையில் 18 கப்பல்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
அதிகமான தொகை இழப்பு
அதில் ஐந்து கப்பல்களில் நிலக்கரி அவசரகால விநியோகமாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. குறித்த ஐந்து கப்பல் சரக்குகளில் ஒன்றில் அதிக சாம்பல் உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஐந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த நிலக்கரியும் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக அரசாங்கத்துக்கு 37 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து சரக்குகளை வழங்கிய நிறுவனத்திற்கு அரசாங்கம் அபராதம் விதிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri