27 கோடி அபராதம் - 5 வருடங்கள் ஜெயில்..! முகப்புத்தகத்ததால் அழிந்த வாழ்க்கை..
இலங்கையில் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் மத ரீதியான மோதல்களாக மாறியபோது, அனோஜன் தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்தார்.
சவுதி அரேபியாவின் கடுமையான இணையவழி குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ், மதத்தைப் புண்படுத்தியதாகக் கூறி அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணி..!அதிர்ச்சியளிக்கும் நீதியமைச்சரின் கருத்து
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri