பாதயாத்திரை குழுவிலிருந்து அகற்றப்பட்ட சுப்பிரமணி நாய் - கதிர்காமத்தை சென்றடைந்தது..!

Sri Lankan Peoples World
By Bavan Jul 07, 2026 01:07 PM GMT
Report

உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாய், அதன் உரிமையாளரால் பாதயாத்திரைக் குழுவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

தகவல்களின் படி, குறித்த நாயின் உரிமையாளர் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரையில் இணைந்திருந்தார்.

முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்..! உலகக்கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்..! உலகக்கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

சுப்பிரமணியம் நாய் 

இந்த பாதயாத்திரை முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை கடந்து, நேற்று (06) இரவு பாணமையை சென்றடைந்தது.

இந்த நிலையில், பாதயாத்திரைக் குழுவை வழிநடத்தியவருக்கும் நாயின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உரிமையாளர் அந்தக் குழுவிலிருந்து விலகி, பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாதயாத்திரை குழுவிலிருந்து அகற்றப்பட்ட சுப்பிரமணி நாய் - கதிர்காமத்தை சென்றடைந்தது..! | Subramaniam Owner Has Taken The Dog Kathirgamam

அதன் பின்னர், அவர் பாணமை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி, ‘சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்ட இந்த நாய் தாம் வளர்த்து வந்த செல்லப்பிராணி என்றும், பாதயாத்திரையின் போது தொடர்ந்து தம்முடன் வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், பாதயாத்திரைக் குழுவில் இருந்த ஒருவர் இந்த நாயை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகவும், எனவே நாயை தாமே கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம்

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம்

பொலிஸாரால் கைது

இதையடுத்து, பொலிஸார் வழங்கிய அனுமதியின் பேரில், இன்று (07) காலை முச்சக்கர வண்டி மூலம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நாய் தொடர்பாக முன்னதாக கல்முனையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பாதயாத்திரை குழுவிலிருந்து அகற்றப்பட்ட சுப்பிரமணி நாய் - கதிர்காமத்தை சென்றடைந்தது..! | Subramaniam Owner Has Taken The Dog Kathirgamam

அத்துடன், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இரு மதங்களைச் சேர்ந்த சிலர் ஒருவரையொருவர் இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்து இளைஞர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் மத உணர்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

you may like this..



மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US