இலங்கை தொடர்பில் ஐ.நா ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை! - அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்செலட் வெளியிட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
" ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்செலட் மூலம் இலங்கைக்கு அறிக்கை கிடைத்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று மயந்த திஸாநாயக்க கூறினார்.
"மிச்செல் பச்செலட் அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் மயந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டதற்கும், சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலகவை கைது செய்தமைக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
