இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் 2 ஆயிரத்து 500 ரூபாய் இலஞ்சம் பெறும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு ஹோலிகுறுஸ் சுற்று வட்டப் பகுதியில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் கலாவதியான காரணத்தினால், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் சந்தேக நபர் 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் அந்த பணத்தில் 2 ஆயிரத்து 500 ரூபாயை பொலிஸ் நிலையத்தில் வைத்து பெறும் போது உப பொலிஸ் பரிசோதகர், ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஓய்வுபெற இன்னும் இரண்டு மாதங்கள் மாத்திரமே இருப்பதாக கூறப்படுகிறது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam