பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைக்கவுள்ள மட்டக்களப்பு மாணவர்கள் (Photos)
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தெரிவித்துள்ளார்.
புனித மைக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விருது
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மூவரே இந்த சாதனையை நிலைநாட்டவுள்ளனர்.
முன்னதாக இந்த கல்லூரியின் பழைய மாணவனும் சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்ததுடன் ஜனாதிபதி விருது பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
