நச்சுப் புகையை சுவாசித்ததால் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை நடந்த இந்த சம்பவத்தில் சுகவீனமுற்ற 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாணந்துறை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குப்பைகள் எரிப்பு
பாடசாலை அருகில் வீடொன்றில் அருகில் இருந்த டயர்களுடன் குப்பையை எரியூட்டியதன் காரணமாக அதில் இருந்து வெளிவந்த புகையுடன் கூடிய காற்றை சுவாசித்தன் காரணமாகவே மாணவர்கள் சுகவீனமுற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர்காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் பயிலும் ஏனைய மாணவர்களை பெற்றோர் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
