நுவரெலியாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு
வெளியான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஆசிரியர் மற்றும் மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (06) நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட திம்புல்ல தமிழ் மகா வித்தியாலயத்தில்
அதிபர் ஏ.என்.கொட்வின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பொன்னாடை
நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் கற்பித்த அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள், விருதுகள் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரனின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்;நிகழ்வில் மலையக மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் உட்பட
அதிபர் ஆசிரியர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.