பாடசாலை பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்கள் பெரும் பாதிப்பு: பெற்றோர் விசனம்
பாடசாலை பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காகிதாதிகள், மாணவர்களின் பாதணிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பினால் பெற்றோரினால் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்
மாணவர்களின் ஒரு ஜோடி பாதணிகள் 1550 ரூபாவிலிருந்து 3780 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளுக்குமான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 38000 ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பென்சில் இன்று 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இறப்பர் சிலிப்பர்கள் 200 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக மற்றுமொரு பெற்றோர் தெரிவித்துள்ளார். நாள் சம்பளத்திற்கு தொழில் புரியம் தமக்கு பாதணிகள் அல்ல சிலிப்பர்களைக் கூட கொள்வனவு செய்து கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை பொருட்கள் அதிகரிப்பு
பாடசாலை காகிதாகிகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலை அதிகரிப்பினால் அநேகமான பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதில் பெரும் சவால்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வொன்றிற்காக தகவல்கள் திரட்டும் போதே பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் காகிதாதி கடைகளின் உரிமையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
