யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் மாணவி படைத்துள்ள சாதனை
யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
நேற்று (19.02.2026) நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் என்ற மாணவியே மருத்துவ கற்கையின் போது பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதிக தங்கப் பதக்கங்களை பெற்ற மாணவி
இவர், மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம், சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் விசேட சித்தி மற்றும் மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவி விருது ஆகிய பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்த போது நிகழாத மிகப்பெரிய மாற்றம் தற்போது வடக்கில்.. தலைகீழாக மாறிய நிலைமை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி என்ற பெருமையை மருத்துவ பட்டதாரி அபிராமி நற்குணம் பெற்றுள்ளார்.

வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam