யாழில் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு கௌரவிப்பு
யாழில் 19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (30.07.2023) நடைபெற்றுள்ளது.
30 பேர் அடங்கிய குழுவில் தெரிவு
இதன்பொழுது தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் 19 வயது பிரிவிற்குட்பட்பட் 30 பேர் அடங்கிய குழுவில் தெரிவு செய்யப்பட்ட சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவி செல்வராசா கிருஸ்ரிகாவிற்கான கௌரவிப்பினை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் வழங்கி வைத்துள்ளார்.
தொடர்ச்சியாக பாண்டவெட்டை காட்டுபுலம் கிராமத்தில் க.பொ.த சாதாரண தர சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் , சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் , கிராமசேவையாளர்கள் , அலைபாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் அருள் சிவானந்தன், நாங்கள் செயற்பாடு அமைப்பின் தலைவர் எஸ்.பிரதாப் , மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





