மாற்று வழியில் காலிமுகத் திடல் நோக்கி பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி (video)
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, பஞ்சிக்காவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை தாண்டி விஜேராமா மாவத்தை, கெப்பட்டிபொல வீதி வழியாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த பேரணி காரணமாக கொழும்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக பொலிஸார் முன்கூட்டியே வீதித் தடைகள் ஏற்படுத்தியுள்ளனர்.
கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று முற்பகல் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி வீதிகளில் புதைத்து நிரந்த வீதி தடைகள் போல அவற்றை பொலிஸார் அமைத்துள்ளனர்.
கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பல இடங்களில் இவ்வாறு நிரந்தரமான வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி வேறு மாற்று வழியில் காலிமுகத் திடலை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
