அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்கள் இரத்து: ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்களை ஜனாதிபதி ஜோ பைடன் இரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் கல்லூரிப் படிப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இதனால் மாணவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு கல்விக்கடன்களை இரத்து செய்துள்ளது.
குறைவான தனிநபர் வருமானம்

அதன்படி, அமெரிக்காவில் ஆண்டிற்கு 1,25,000 டொலருக்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்டவர்களுக்கு, 10,000 டொலர் வரை கல்விக் கடன் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாத வருமானத்தில் 10% வீதமாக காணப்பட்ட கல்விக் கடன் இனி 5 சதவீதமாகக் குறைக்கபடும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கல்விக் கடன்கள் இரத்து செய்வது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
If you make under $125,000, you're eligible for up to $10,000 in student loan debt relief.
— President Biden (@POTUS) August 24, 2022
And almost ninety percent of the benefit will go to folks making less than $75,000 a year.
There is an entire generation now saddled with unsustainable student loan debt in exchange for a college degree.
— President Biden (@POTUS) August 24, 2022
We’re making incredible progress bringing relief to those that need it and fixing the student loan system so it works for working people. pic.twitter.com/YRNxOXTvCw