வேலைக்காக வெளிநாடு சென்ற தாய் - 15 வயது மாணவியை கடத்திய இளைஞன்
ஹப்புத்தளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர் லிந்துலை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப் பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கு வருகின்றார்.
15 வயதான குறித்த மாணவி லிந்துலை பொலிஸ் பிரிவில் உள்ள லோகி தோட்டத்தை சேர்ந்தவராகும்.
பேஸ்புக் காதலன்
குறித்த மாணவி பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த மாணவி 15 ஆம் திகதி தனது வீட்டிற்குத் தெரிவிக்காமல் நானுஓயா ரயில் நிலையத்திற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பாடசாலை மாணவியை தொடருந்தில் ஹப்புத்தளைக்கு அழைத்து சென்றதாக லிந்துல பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவியின் தாய் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் தனது பராமரிப்பில் உள்ள மகள் வீட்டில் இல்லை என லிந்துலை பொலிஸாரிடம் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
மருத்துவரிடம் பரிசோதனை
அதற்கமைய, குறித்த மாணவியின் தொலைபேசி எண்ணை பகுப்பாய்வு செய்த பின்னர், சந்தேக நபர் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த மாணவி நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
